Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கு விற்பனை!

10:37 AM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

தங்கம் விலையானது கிடு, கிடுவென குறைந்து, இன்று கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரன் தங்கத்திற்கு 400 ரூபாயும் குறைந்துள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்த தங்கம் விலை, கடந்த மே 20-ம்தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் விலை சரியத் தொடங்கியது.

பட்ஜெட் தாக்கலான கடந்த ஜூலை 23 முதல் 26 வரை தொடர்ந்து 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) சற்றே உயர்ந்தது. அன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6465-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.51,720-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415-க்கும். பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.51.320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.89.50-க்கு விற்பனையாகிறது.

Tags :
Goldgold priceGold rate
Advertisement
Next Article