Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர்ந்து அதிகரிக்கும் கடத்தல்: ஏப்ரல் - செப்டம்பரில் 2,000 கிலோ தங்கம் பறிமுதல்!

09:03 AM Oct 26, 2023 IST | Web Editor
Advertisement

நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சார்பில் 2 ஆயிரம்  கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கம் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.  இதனால் இந்தியாவில் அதிக அளவில் தங்க இறக்குமதி நடைபெறுகிறது என்றாலும் ஆண்டுதோறும் நாட்டில் பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், சுங்க துறை சார்பில் 2 ஆயிரம் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 1,400 கிலோ தங்கம் மட்டுமே கைப்பற்றப்பட்டது.  மொத்தமாக 2022-ம் நிதியாண்டில் மொத்தம் 3,800 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு நேபாளம் மற்றும் மியான்மர் எல்லைகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற 2022-ம் ஆண்டில் நாட்டில் அதிக அளவாகக் கேரளாவில் 755.81 கிலோ தங்கக் கடத்தல் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (535.65 கிலோ) மற்றும் தமிழகம் (519 கிலோ) உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் 3,982 தங்கக் கடத்தல் வழக்குகளும், அதற்கு முந்தின 2021-ம் ஆண்டில் 2,445 தங்கக் கடத்தல் வழக்குகளும் பதிவாகி இருந்தன.

 

 

Advertisement
Next Article