Gold Rate | மீண்டும் மீண்டுமா..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் உயர்ந்து இருந்தது. இதேபோல் பிற்பகலில் கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் அதிகரித்து இருந்தது. ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இதனிடையே இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, இன்று காலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11 ஆயிரத்து 525-க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, 92 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், சவரனுக்கு மேலும், ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640க்கு விற்பனையாகிறது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.197-க்கு விற்பனை செய்யப்படுகிறது.