Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Gold Rate Today | ஷாக் மேல ஷாக்... தங்கம் விலை அதிரடி உயர்வு... ஒரு சவரன் இவ்வளவா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
09:45 AM Jun 14, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த 3 தினங்களாக தொடர் ஏற்றத்தை சந்தித்து வந்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

அந்த வகையில், தங்கம் விலை கடந்த 11ம் தேதி கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கத்தின் விலை 12ம் தேதிகிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை நேற்று (ஜுன் 13) கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9,320க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
22 Carat916 GoldChennaiGoldGold Marketgold priceGold price TodayGold rategold rate todayGramJewellerynews7 tamilsilversilver ratetamil nadu
Advertisement
Next Article