Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Gold Rate Today | நகை வாங்க ரெடியா? வார தொடக்கத்திலேயே குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
10:18 AM Jun 09, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சைதான்” – இபிஎஸ் கண்டனம்!

அதன்படி, தங்கம் விலை நேற்று முன்தினம் (ஜுன் 7) சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 9) அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.118-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
22 Carat916 GoldChennaiGoldgold priceGold rategold rate todayGramnews7 tamilsilversilver ratetamil nadu
Advertisement
Next Article