Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Gold Rate | தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளது.
05:19 PM Nov 06, 2025 IST | Web Editor
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளது.
Advertisement

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

Advertisement

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது. தொடர்ந்து, இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.164க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.11,320க்கும், சவரனுக்கு ரூ.90,560க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Goldgold priceGold price TodayGold rategold rate todayJewellery
Advertisement
Next Article