Gold Rate | தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆவரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11ஆயிரத்து 350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90ஆயிரத்து 800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.