Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Gold Rate | தங்கம் விலை குறைவு - இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது.
10:01 AM Nov 21, 2025 IST | Web Editor
தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது.
Advertisement

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

Advertisement

அந்த வகையில், தங்கத்தின் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ. 4 குறைந்து ஒரு கிராம் ரூ.169-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
Goldgold priceGold rateJewellerysilvertodaygoldrate
Advertisement
Next Article