Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Gold Rate | இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய விலை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
10:17 AM May 17, 2025 IST | Web Editor
இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இதையும் படியுங்கள் : “மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..” – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – சசிகுமார் நெகிழ்ச்சி!

படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் (மே 15) கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.68,880-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, தங்கம் விலை இன்று (மே 16) அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்த ரூ.8,720க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107.90க்கும் பார் வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் இன்று விலைமாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,720க்கும், சவரன் ரூ.69,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
22 Carat916 GoldChennaiGoldgold priceGold rategold rate todayGramnews7 tamilNews7 Tamil Updatessilversilver ratetamil nadu
Advertisement
Next Article