Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை அதிரடி உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது.
10:19 AM Jun 11, 2025 IST | Web Editor
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

Advertisement

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :
ChennaiGoldGoldMarketGoldpriceGoldPriceTodayGoldRateGoldRateTodayJewellery
Advertisement
Next Article