Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இறங்குமுகத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

10:53 AM Nov 16, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கும், சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.98.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,900 ஆகவும் உள்ளது.

Tags :
ChennaiGoldGold rateJewelssilver
Advertisement
Next Article