Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

1 வாரமாக தங்கம் விலை சரிவு - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

12:02 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இதையும் படியுங்கள் : “குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை” – பில்கீஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. முன்னதாக கடந்த 2 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5920 ரூபாயாக இருந்தது. அதேபோல், கடந்த 3 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5915 ரூபாயாக குறைந்தது.

அதன்படி கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ரூ.50 குறைந்து கிராமுக்கு 5870 ரூபாயாக இருந்தது.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ. 10 குறைந்து. அதனைத்தொடர்ந்து, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.5,830-க்கு  விற்பனையாகிறது.  

Tags :
22Carat916GoldChennaiGoldGoldpriceGoldRateGoldRateTodayGramTamilNadu
Advertisement
Next Article