அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.8,880-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.71,040-க்கும் விற்பனை
10:16 AM May 12, 2025 IST
|
Web Editor
Advertisement
தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை, சென்னையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72.360-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
இந்நிலையில் இன்று (மே12) 22 காரட் தங்கம் கிராமுக்கு அதிரடியாக ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7320க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.58,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Article