ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை!
தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் தங்கம் விலை, சென்னையில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72.360-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று(மே.12) காலை, தங்கம் கிராமுக்கு அதிரடியாக ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ரூ. 1320 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.165 குறைந்து, ரூ.8,880க்கும் விற்பனை செய்யப்பட்ட தங்கம் தற்போது மேலும் ரூ.130 குறைந்து ரூ.8,750க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து, ரூ.71,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் தற்போது மேலும் ரூ.1,040 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை குறைந்திருப்பது, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.