Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

12:01 PM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,750 ஆகவும்,  சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையாகிறது.  18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.4,710 ஆகவும்,  சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.37,680 ஆகவும் விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்: 70,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்!

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,  வெள்ளி விலையும் குறைந்துள்ளது.  வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

 

Tags :
1KGSilver22Carat8Grams916GoldChennaiGoldGoldpriceGoldRateGoldRateTodayGramNews7Tamilnews7TamilUpdatessilversilverrateTamilNadu
Advertisement
Next Article