Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் தங்கம் விலை உயர்வு!

01:10 PM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

Advertisement

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.79.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ரூ.5740
1 சவரன் தங்கம் ரூ.45920
1 கிராம் வெள்ளி ரூ.79.20
1 கிலோ வெள்ளி ரூ.79200

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ரூ.5730
1 சவரன் தங்கம் ரூ.45840
1 கிராம் வெள்ளி ரூ.79.00
1 கிலோ வெள்ளி ரூ.79000

 

Tags :
ChennaiGoldnews7 tamilNews7 Tamil Updatesprice hikesilvertamil nadu
Advertisement
Next Article