Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

10:39 AM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.  குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏறியும், இறங்கியும் காணப்பட்டது.

அந்த வகையில்,  நேற்று ஒரு சவரன் ரூ. 53,800க்கு விற்பனையானது.  இந்த நிலையில்,  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து ரூ. 54,400க்கும்,  கிராமுக்கு ரூ. 75 அதிகரித்து ரூ. 6,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல்,  வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 அதிகரித்து ரூ. 98க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
#916 gold22 CaratChennaiGoldgold priceGold rategold rate todayGramsilversilver ratetamil nadu
Advertisement
Next Article