தங்கம் விலை உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் காணப்பட்டு வரும் நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு தங்கம் விலை ரூ.40 உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே இறங்குமுகத்தில் விற்பனையாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7130-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஒரு கிராம் வெள்ளி ரூ.100 -க்கும் , ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.