தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.640க்கு குறைந்து, ரூ.65,760க்கு விற்பனையாகிறது.
10:18 AM Mar 15, 2025 IST
|
Web Editor
Advertisement
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக புதிய உச்சமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டியது.
Advertisement
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கும், ஒரு கிராம் ரூ.8,230க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.640க்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.8,220க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Article