Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! - எவ்வளவு தெரியுமா?

10:32 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்றுமுன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்தார் தினேஷ் கார்த்திக்!

இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம்  இன்று ரூ. 110 குறைந்து ரூ. 6750 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 54,880 விற்பனையான நிலையில் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 100.30 க்கு விற்பனையான நிலையில் கிராமுக்கு ரூ. 3.30  குறைந்து ரூ. 97 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
#gold jewelsChennaiDecreaseGoldGold rateTamilNadutoday
Advertisement
Next Article