Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74ஆயிரத்து 440-க்கு விற்பனையாகிறது.
10:04 AM Jun 16, 2025 IST | Web Editor
தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74ஆயிரத்து 440-க்கு விற்பனையாகிறது.
Advertisement

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

Advertisement

தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த 3 தினங்களாக தொடர் ஏற்றத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 305-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74ஆயிரத்து 440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaiGoldgold priceGoldMarketGoldPriceTodayGoldRateGoldRateTodayJewellery
Advertisement
Next Article