Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!... இன்றைய நிலவரம்!

10:44 AM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்திருந்த நிலையில், சனிக்கிழமையான இன்று மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. 

Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, பொதுமக்களிடையே பேரிடியாக இறங்கியுள்ளது. குறிப்பாக வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுவதால், திருமணம் போன்ற சுபகாரியங்களை திட்டமிட்டு இருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட ஆபரணத் தங்கத்தின் விலை 59 ஆயிரம் ரூபாயாக இருக்க, செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி என சேர்த்து ஒரு சவரன் விலையே 63 ஆயிரம் ரூபாயை நெருங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு தங்கமே மிகவும் எளிதான முதலீடாக உள்ளது. ஆனால், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் விலையால், தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. பங்குச் சந்தையில் தொடர்ந்து நிலவும் வீழ்ச்சி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு, ரூ.220 அதிகரித்துள்ளது.

தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  

Tags :
Chennaigold priceGold rate
Advertisement
Next Article