Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பழனி முருகன் கோயிலுக்கு செல்கிறீர்களா? உங்களுக்கான செய்திதான் இது!

08:00 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ரோப் கார் சேவை மற்றும் விஞ்ச் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முக்கியமாக வயதானவர்கள், குழந்தைகளுடன் வருவோர் என மலை ஏற முடியாத பக்தர்கள் அனைவரும் ரோப் கார் சேவை மற்றும் விஞ்ச் சேவையையே நம்பி பழனி கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில், ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் சேவை வருகிற 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாகவும் படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags :
news7 tamilPazhaniRope CarserviceTemple
Advertisement
Next Article