Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"God Bless..." - 'குட் பேட் அக்லி' படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

அஜித்குமார் நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11:27 AM Apr 10, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள  திரைப்படம்  ‘குட் பேட் அக்லி’.

Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில்  பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி டிரெண்டானது. இப்படம் இன்று (ஏப்.10) பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. முன்னதாக  ‘குட் பேட் அக்லி’ ரிலீஸை ஒட்டி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் 'குட் பேட் அக்லி' படம் ரிலீசாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்... God Bless" என தெரிவித்தார். மேலும், பேசிய அவர் "ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது. எப்போது நிறைவடையும் என்று தெரியவில்லை. மறைந்த குமரி அனந்தனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனத் தெரிவித்தார்.

Tags :
ajithAjithkumarAKgbuGood Bad UglyGV Prakash Kumarnews7 tamilNews7 Tamil UpdatesPrasannaRajiniRajinikanthTrisha
Advertisement
Next Article