Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஸ்டார்ட் மியூசிக்...” GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியானது!

07:45 PM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

விஜய் நடித்துள்ள ‘The Greatest of All Time’ படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மாஸ்கோவில்  படமாக்கப்பட்டு வருகிறது.  படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு விரைவில் அங்கு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் “நாளை சம்பவம் உறுதி ”என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், கோட் படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  இப்பாடலை விஜய் பாடியுள்ளார்.  இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

 

Tags :
goatGoat First SingleGoat First Single Promothalapathy vijayThe Greatest of All Timevenkat prabhuvijay
Advertisement
Next Article