Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய்யின் ‘GOAT’ திரைப்படம்: காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!

12:08 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட் திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு என்கிற பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. யுவன் இசையில் விஜய் பாடிய இப்பாடலுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி விசில் போடு பாடல் கடும் விமர்சனங்களையும் சந்தித்தது.

விசில் போடு பாடலில் சொதப்பிய விஜய் - யுவன் கூட்டணி,  ரசிகர்களை திருப்தி படுத்த மற்றுமொரு பாடலிலும் இணைந்து பணியாற்றி இருக்கிறதாம்.  அப்பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முதன்முறையாக யுவன் இசையில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். அப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என கூறப்படுகிறது. அநேகமாக விஜய்யின் பிறந்தநாளன்று அப்பாடல் வெளியாக வாய்ப்புள்ளது. 

Tags :
goatNews7Tamilnews7TamilUpdatesthalapathy vijayThe GoatThe Greatest of All Timevenkat prabhuvijayYuvan shankar raja
Advertisement
Next Article