Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமூக வலைதளங்களில் #GOAT திரைப்பட புரமோஷன்!

11:00 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

Advertisement

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமான இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் நாளை விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் கோட், முன்பதிவில் ஏற்கனவே பல்வேறு வசூல் சாதனைகள் படைத்துள்ளது. கோட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாதது படத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

மேலும், கோட் படத்தின் பாடல்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, வெங்கட் பிரபு மற்றும் கோட் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் தீவிர புரமோஷனில் இறங்கியுள்ளனர். வெங்கட் பிரபு ஒரு பக்கம் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார் என்றால் அர்ச்சனா கல்பாத்தி, பிரேம்ஜி ஆகியோரது புரமோஷன்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

படத்தில் அஜித்தின் கேமியோ அல்லது வசனங்கள் என்று ஏதாவது ஒன்று இடம்பெறும் என தெரிகிறது. படம் ஓடும் மூன்று மணி நேரம் ரசிகர்கள் போனை தொட மாட்டார்கள் எனவும், அந்த அளவு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அதேபோல், கோட் கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் அதிறும் எனவும் கூறியுள்ளார்.

காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று வெளியானது.

2011ஆம் ஆண்டு அஜித்தை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படமும் அந்தாண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor vijayArchana KalpathigoatGOAT The MovieNews7TamilPremjiThalapathyThe Goat BookingsThe Greatest of All Timevenkat prabhuvijayYuvan shankar raja
Advertisement
Next Article