Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

06:15 PM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில்,  அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில் இந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  இது தொடர்பான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:  ‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!

தொடர்ந்து நவ.28-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்த காலக்கெடு கடந்த செவ்வாயன்று (நவ.28) முடிவடைந்த நிலையில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் கிடைத்த பல்வேறு தரவுகளை பகுத்தாய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால்,  நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொல்லியல் துறையினரால் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாத சூழல் உள்ளது.

இதனையடுத்து அறிவியல் பூர்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க, மேலும் 3 வாரம் கூடுதல் கால அவகாசம் கோரி, நவ.28 அன்று, இந்திய தொல்லியல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதன் மூலம், ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட அறிவியல்பூர்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
ASIGyanvapi MosqueIndiamosquenews7 tamilNews7 Tamil Updatesuttar pradeshVaranasi
Advertisement
Next Article