ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இந்த வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை, ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனிடம் சிறப்பு புலானாய்வு குழு விசாரணை நடத்தியதன் அடிப்படையில், முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
அதில் ஞானசேகரின் வாக்குமூலம், அவரது வீட்டில் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், அவனின் மொபைல் போன், அதில் இடம் பெற்றுள்ள உரையாடல்கள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிக்கை நகலானது இன்று ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டது. இதை கையெழுத்திட்டு ஞானசேகரன் பெற்றுக் கொண்டான்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.