Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களே ரெடியாகுங்க..! பொங்கல் பண்டிகைக்கான #TrainTicketBooking இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம்!

07:13 AM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டை, இன்று சரியாக காலை 8 மணிக்கு ஐ.ஆர்.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட,  சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பே தொடங்கும்.

அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15ம் தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16ம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு:

வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய வரும் 13ம் தேதியிலும், ஜனவரி 12ம் தேதிக்கு வரும் 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.

ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ம் தேதியும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Pongaltamil naduTrain ticket
Advertisement
Next Article