Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜெர்மனியில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்! வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை!

08:36 PM Jan 30, 2024 IST | Web Editor
Advertisement

ஜெர்மனியில் சோதனை முயற்சியாக வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட  உள்ளது.

Advertisement

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  இதிலிருந்து மீழ அந்நாட்டில் புதிய சோதனை முயற்சி நடைமுறைபடுத்தப்படவுள்ளது.  உலகில் வளர்ந்து நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா,  பெல்ஜியம்,  ஸ்பெயின், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றன.  இந்த நிலையில் ஜெர்மனியும் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்க உள்ளது.

அதன்படி பிப்.1-ம் தேதி முதல்,  வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது.  மீத 3 நாட்கள் விடுமுறை.  இதனை கடைபிடிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

இதையும் படியுங்கள்:  அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? – டி.ஆர்.பாலு பேட்டி!

இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பல தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.   இந்த நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நல்ல பலனை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன.  இதில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.  இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
countriesGermanyholidayWORK
Advertisement
Next Article