Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மியான்மரில் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல்!

மியான்மரில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட ஒன்றிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
04:47 PM Aug 19, 2025 IST | Web Editor
மியான்மரில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட ஒன்றிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement

மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்தது. இதனயடுத்து அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.  அரசுத் தலைவராக இருந்த ஆங் சான் சூகி கது செய்யப்பட்டு  சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா். இதனை தொடர்ந்து ரானுவ ஆட்சியாளர்களுக்கு கிளர்ச்சியாளர்களுக்கு இடையே உள் நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் மியான்மரில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட ஒன்றிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தலானது நாட்டில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நாட்டின் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

இந்தத் தோ்தல் நியாயமாக நடைபெறாது என்று விமர்சித்துள்ள  கிளா்ச்சியாளா்களும், எதிா்க்கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Tags :
#miyanmargenralelectionlatestNewsWorldNews
Advertisement
Next Article