Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் - மார்ச் 28ல் நடைபெறும் என அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.
07:08 PM Mar 14, 2025 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியின் பொதுக்பொதுக்குழு கூட்டதிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சிப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
General Committee MeetingTamilaga Vettri KazhagamtvkpartyTVKVijayvijay
Advertisement
Next Article