மடகாஸ்கரிலும் GEN-Z கிளர்ச்சி - தப்பியோடிய அதிபர்..!
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர் நாட்டில் அதிபர் அண்ட்ரே ரஜோலினாவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டில் ஜென் - இஸட் மடகாஸ்கர் என்ற இளைஞர் குழு அரசுக்கு எதிராக போராட தொடங்கினர்.
தற்போது போராட்டமானது ஊழல், வறுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது. மேலும், மடகாஸ்கர் ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவும் அரசுக்கு எதிராக திரும்பியதை தொடர்ந்து அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிள்ளார். அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் GEN-Z போராட்டங்களால் கவிழ்ந்த நிலையில் தற்போது மூன்றாவது நாடாக மடகாஸ்கரும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.