காஸா-இஸ்ரேல் போர்: தீர்வு காண இந்தியா பங்களிக்க வேண்டும் - ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல்!
உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி எனவும், காஸா-இஸ்ரேல் போரில், இந்தியா சிறந்த பங்களிப்பை அளிப்பதால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில், 4,237 பேர் குழந்தைகள். கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். இதை முன்னிறுத்தியே, ஐ.நா பொதுச் சபையில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவு அளித்தன. 14 நாடுகள் எதிர்த்தன. 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இந்தியாவும் வாக்கெடுப்பை புறக்கணித்தது. அது, இந்தியாவின் முடிவு. இந்தியாவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். புவி அரசியலில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும்.