Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் எப்போது? கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தில் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
05:21 PM Jan 27, 2025 IST | Web Editor
Advertisement

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இப் படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பல காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போனது. அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்  'துருவ நட்சத்திரம்' படத்தில் ரிலீஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி பேசுகையில், ”துருவ நட்சத்திரம் படத்தின் மீதுள்ள பிரச்னைகள் ஒன்றின்பின் ஒன்றாக தீர்ந்து வருகிறது. வருகிற கோடை காலத்தில் படம் ரிலீஸ் ஆகும். 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆன 'மதகஜராஜா' மாபெரும் வெற்றியடைந்ததை போல 'துருவ நட்சத்திரம்' படமும் வெற்றியடையும்” என தெரிவித்தார்.

Tags :
ChiyaanVikramDhruva NatchathiramGowtham Vasudev Menonupdate
Advertisement
Next Article