Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் டைடன்ஸ் அணியின் உரிமையாளராகும் கௌதம் அதானி?

12:34 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

தொழிலதிபர் கௌதம் அதானியின் அதானி குழுமம் விரைவில் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் லாபகரமான விளையாட்டு லீக்களில் ஒன்றான 'இந்தியன் பிரீமியர் லீக்கில்' (ஐபிஎல்) நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

ஐபிஎல் 2021 சீசனில் உருவான குஜராத் டைடன்ஸ் அணி, அதே வருடத்தில் கோப்பை வென்று அசத்தியது. இதனால், ரூ.5,625 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த அணியின் மதிப்பு, ஒரே ஒருடத்தில் பன்மடங்கு அதிகரித்தது.

குஜராத் டைடன்ஸ் அணியை வாங்கிய சிவிசி கேபிடல்ஸ் நிறுவனமானது, சூதாட்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்து வந்த நிலையில், ஐபிஎல் அணியை வாங்கியதால் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாத காரணத்தினால், சிவிசி கேபிடல்ஸ் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை ஈடுகட்ட குஜராத் டைடன்ஸ் அணியின் முக்கிய உரிமையாளர் என்ற அந்தஸ்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, குஜராத் டைடன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை வேறு உரிமையாளருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதன் மூலம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை சிவிசி நிறுவனத்திற்கு கிடைக்கும்.

இந்நிலையில், குஜராத் டைடன்ஸ் அணியின் பெரும்பாலான பங்கை வாங்குவதற்கு கௌதம் அதானி முடிவு செய்திருப்பதாகவும், எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்க தயார் என்ற முடிவிலும் இருக்கிறாராம். ஐபிஎல் அணிகளின் பங்கை விற்பதற்கு, வாங்குவதற்கு பிப்ரவரி தான் கடைசியாகும். இதனால், அதற்கு முன்பே வாங்க கௌதம் அதானியுடன் சேர்ந்த பலரும் போட்டிபோட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், குஜராத் டைடன்ஸ் அணியின் பங்கை ரூ.5000 கோடிக்கு வாங்க அதானி தயாராக இருப்பதால், அடுத்த மாதமே குஜராத் டைடன்ஸ் அணிக்கு கௌதம் அம்பானி, முக்கிய உரிமையாளராக மாறுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கௌதம் அதானி, ஏற்கனவே மகளிர் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியை வாங்கி உள்ளார். அந்த அணியை ரூ.1289 கோடிக்கு வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
adani groupCricket UpdateGautam AdaniGujarat TitansIPL
Advertisement
Next Article