ஓய்வு பெறப் போகிறாரா கௌதம் அதானி? வெளியான பரபரப்பு தகவல்!
அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது 70 வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி. மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவான இவருக்கு தற்போது 62 வயதாகிறது. அதானிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்கள், மருமகன்களையே அவர் வாரிசாகக் கூறி வருகிறார். இந்த நிலையில், “தொழில் வளர்ச்சி நீடித்து நிலைத்து நிற்க அதன் மீதான அதிகாரத்தை வாரிசுகளிடம் ஒப்படைப்பது மிக மிக முக்கியம்” என்று அதானி ப்ளூம்பெர்க் நியூஸுக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் தலைமைப் பொறுப்பு மாற்றம் இயல்பாக, படிப்படியாக, முறைப்படி நடக்க வேண்டும் என்பதால் அந்தப் பொறுப்பை 2-வது தலைமுறையினரிடமே நம்பிக்கையுடன் விட்டுள்ளதாகவும் கௌதம் அதானி கூறியுள்ளார். அதானி தனது 70வது வயதில் ஓய்வு பெறும்பட்சத்தில் மகன்கள் கரண் அதானி, ஜீத் அதானி மற்றும் அவரது மருமகன்கள் பிரணவ், சாகர் ஆகியோர் இணைந்தே தொழிலை நடத்தலாம்.
மேலும் அவர் கூறிகையில், “எனது 4 வாரிசுகளும் அதானி குழும வளர்ச்சி குறித்து ஆர்வமுடன் உள்ளனர். பொதுவாக இராண்டாம் தலைமுறையினர் தொழில் வளர்சியில் இத்தகைய ஆர்வத்தைக் காட்டுவது சாதாரணமானது இல்லை. எனது வாரிசுகள் ஒன்றிணைந்து அதானி பாரம்பரியத்தை மேலும் வலுவாகக் கட்டமைக்கத் தயாராக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.