Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த கவுதம் கம்பீர்!

07:53 PM Jun 17, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.

Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துள்ளார். ஆளும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் எம்.பி.யாக பதவி வகித்த கவுதம் கம்பீர், கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக தீவிர அரசியலில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவுதம் கம்பீர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கம்பீர் பதிவிட்டிருப்பதாவது:

"அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித்ஷா இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துவார்"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :“மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் குறித்து போதுமான அளவுக்கு ஆலோசித்துவிட்டோம்” – இலங்கை கேப்டன்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் நிறைவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியை வழிநடத்துவதற்கான விருப்பம் இருப்பதாக கம்பீரும் தெரிவித்திருந்தார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Tags :
amit shahgautam gambhirNews7TamilNews7Tamil Updatesunion minister
Advertisement
Next Article