Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் - பிசிசிஐ அறிவிப்பு!

08:33 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கிரிக்கெட் (ஆடவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

Advertisement

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றதோடு தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இன்று (ஜூலை 9) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க கவுதம் கம்பீரை வரவேற்கிறேன். நவீன கால கிரிக்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துடன், அதனை கவுதம் கம்பீர் மிக அருகில் இருந்து பார்த்துள்ளார். அவரது கிரிக்கெட் பயணத்தில் அவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு அவர் எடுத்துச் செல்வார் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணிக்காக அவர் தெளிவான திட்டத்தினை வைத்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் தெளிவான திட்டம் இந்த இரண்டும் அவரை தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபராக மாற்றியுள்ளது. இந்த புதிய பயணத்தில் பிசிசிஐ அவருடன் உறுதியாக துணை நிற்கும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
BCCIgautam gambhirhead coachJaishahNews7Tamilnews7TamilUpdatesTeam India
Advertisement
Next Article