கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை - #Odisha மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது!
05:08 PM Aug 26, 2024 IST
|
Web Editor
போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சோபர்தான் சமல் என்பவரது மகனான சஞ்சய்குமார் சமல்(40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய்.1,14,400/- மதிப்புள்ள சுமார் 34 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Advertisement
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெரிய நாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கீரணத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : SEBI நோட்டீஸ் அனுப்பியதன் எதிரொலி - #Paytm பங்குகள் 9% சரிவு!
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
Next Article