Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இறுதிக்கட்டத்தில் கங்குவா திரைப்பட படப்பிடிப்பு...எப்போது ரிலீஸ் தெரியுமா?

01:11 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

ஐதராபாத்தில் ‘கங்குவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு மத்தியில்  படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது  நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டியும் (நடராஜ்) நடிக்கின்றனர்.

கங்குவா உலகளவில் 38 மொழிகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படம் அடுத்தாண்டு மத்தியில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Cinema updatesGnanavel RajaKanguvaNews7Tamilnews7TamilUpdatesSivaSurya
Advertisement
Next Article