Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

24 மணிநேரத்தில் 2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘கங்குவா’ டிரெய்லர்!

06:37 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்பட டிரெய்லர் ஒரேநாளில் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நேற்று இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Tags :
Bobby DeolDevi Sri PrasadKanguvaSivaStudio Green
Advertisement
Next Article