Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளா, கர்நாடக கார்களை குறி வைத்து திருடும் கும்பல் - பிடிபட்ட 4 பேர் கூறிய திடுக்கிடும் தகவல்!

02:54 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

கேரளா மற்றும் கர்நாடக மாநில கார்களை மட்டும் குறி வைத்து கும்பல் ஒன்று திருட்டில் ஈடுபட்டுள்ளது. கார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கதை.. எங்கு நடந்தது.. விரிவாக பார்க்கலாம்..

Advertisement

கேரளா திருச்சூரைச் சேர்ந்த முகமது அக்தன், நவாஸ் உள்ளிட்ட மூவர் கடந்த மார்ச் 21-ம் தேதி கோவை குற்றாலத்திற்கு தனித் தனி காரில் வந்துள்ளனர். செல்வபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகே தங்களது கார்களை நிறுத்திவிட்டு, தொழுகைக்கு சென்ற அவர்கள், திரும்பி வந்து பார்த்த போது, கார்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அசாருதீன், முகமது யூசுப், யாசிர் மற்றும் துடியலூரை சேர்ந்த ஜான் சுந்தர் ஆகியோர் கார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் கார்களை குறி வைத்து இந்த கும்பல் திருடி விற்றது விசாரணையில் தெரியவந்தது. திருடப்பட்ட காரின் வண்ணம், பதிவு எண், மற்றும் பழைய ஜிபிஎஸ் ஆகியவற்றை அகற்றி விட்டு, புதிய வண்ணம், பதிவு எண், ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கார்களை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. ரூ.11 லட்சம் மதிப்புள்ள தார் என்ற காரை, கலர் மற்றும் ஜிபிஎஸ்-ஐ மாற்றி 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

காரின் உரிமையாளரை தொடர்பு கொள்ளும் கடத்தல் கும்பல், கார் திரும்ப வேண்டும் என்றால், தங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என நிர்பந்திப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கார்களை ஒருவர் மாற்றி ஒருவர் என சங்கிலி தொடர் போல் மாறி மாறி விற்பனை செய்துள்ளதால், கார்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பிடிபட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கார் கொள்ளையில் மேலும் சில நபர்களுக்கு தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இதற்கு மூளையாக செயல்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

Tags :
carCoimbatoreCrimeKarnatakaKeralaNews7Tamilnews7TamilUpdatesTheft
Advertisement
Next Article