#GaneshChaturthi எதிரொலி - சோளத்தின் விலை அதிகரிப்பு!
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சோளத்தின் விலை அதிகரித்துள்ளது.
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை, கொழுக்கட்டை, சோளம், விளாம்பழம், கம்பு போன்றவை வைத்து படைத்து வழிபாடு செய்யப்படும். விநாயகருக்கு இந்த பொருட்களெல்லாம் பிடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இன்று அதிகாலை முதலே மக்கள் பழங்கள், கரும்பு, வாழை குருத்து போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஷேச பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் பழங்கள், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சோளம், கரும்பு, வாழை கன்றுகள், சோளம் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலையில் ஒரு மூட்டை சோளமானது 800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், சரக்கு வரத்து குறைவால் தற்போது 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.