கந்த சஷ்டி விழா - வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கல் என்ற கிராமத்தில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கந்த சஷ்டி விழா அக்டோபர் மாதம் 13-ம் தேதி கணபதி
ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, முருகன் திருமணம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயக பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், அதனைத் தொடர்ந்து முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் 24-ம் தேதி வரை மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதில் உண்மையான யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும், அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம், மகா தீபாரதனை உள்ளிட்டவை செய்யப்பட்டு வள்ளி, முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.