Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’கேம்லின்’ நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல் நலக்குறைவால் காலமானார்!

10:57 AM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல ஸ்டேஷனரி ப்ராண்ட் ஆன Kokuyo Camlin-ன் நிறுவனர் சுபாஷ் தண்டேகர்  நேற்று காலமானார்.

Advertisement

ஸ்டேஷனரி தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் கேம்லின் நிறுவனத்தின் தலைவரான சுபாஷ் தண்டேகர் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 85.

இந்திய ஸ்டேஷனரி உற்பத்தித் துறையில் தனி இடத்தையும்,  தனி வாடிக்கையாளர் கூட்டத்தையும் ஆரம்பம் முதல் வைத்திருக்கும் கேம்லின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முழு முக்கிய காரணமானவர் சுபாஷ் தண்டேகர்.

1931 ஆம் ஆண்டு  ஜி.பி.தண்டேகர் ஆகியோர் இணைந்து கேம்லின் பிராண்டை துவங்கினர். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேம்லின் நிறுவனம், ஜப்பான் நாட்டின் கோகுயோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. தற்போது கேம்லின் நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளை ஜப்பான் நாட்டின் கோகுயோ வைத்துள்ளது.

சுபாஷ் தண்டேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்றது.

Tags :
#subashcamlinRIP
Advertisement
Next Article