கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள்- ஈரோட்டில் விழிப்புணர்வு மினி மாரத்தான்!
ஈரோட்டில், கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
மத்திய அரசு திட்டத்தின்கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் வருகின்ற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை
நடைபெற உள்ளது.
நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஈரோட்டில் மினி மாரத்தான் போட்டி
இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரண்யா
கலந்து கொண்டு, போட்டியினை துவக்கி வைத்தார்.
வஉசி பூங்கா மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த மினி மாரத்தான் போட்டி, மேட்டூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று, மீண்டும் பெருந்துறை சாலை வழியாக வஉசி பூங்கா மைதானத்தில் நிறைவடைந்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.