ஜி ஸ்கொயரின் ஆசிரியர் தின கொண்டாட்டம் - செப்டம்பர் மாத சிறப்பு ஆஃபர்!
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்று ஜி ஸ்கொயெர் ஆகும். இந்நிறுவனம் , குடும்பங்கள் தங்கள் கனவு இல்லங்களை கட்டியெழுப்ப மனைகள் மற்றும் வில்லாக்களை விற்பனை செய்கிறது. மேலும் வணிக நோக்கங்களுக்கான இடங்களையும் விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் DTCP மற்றும் CMDA அங்கீகாரம் பெற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. இவர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் தங்கள் கிளைகள் அமைந்துள்ளன. ஜி ஸ்கொயெர் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் சுமார் 18,000 க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜி ஸ்கொயர் நிறுவனம் பல்வேறு சிறப்பு ஆஃபர் அறிவித்துள்ளது.
அதன் படி மனை வாங்கும் அனைத்து ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கு மனைத்தொகையில் 5% தள்ளுபடியுடன் பிரத்யேக EV வாகன சலுகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர் செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். மேலும் நேரடி விற்பனைகளே செல்லுபடியாகும்.
இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்களை வார்த்தைகளால் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வெகுமதிகளையும் வழங்கி கௌரவிப்போம் என ஜிஸ்கொயெர் தெரிவித்துள்ளது.