செரலாக்கில் கூடுதல் சர்க்கரை - ஆய்வுக்கான பணிகளை தொடங்கியதாக FSSAI தகவல்!
இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான செரலாக் மற்றும் நிடோவில் கூடுதல் சர்க்கரை சேர்க்கபடுவதாக எழுந்த புகாரையடுத்து, இதுதொடர்பாக பரிசீலிப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஆய்வு நிறுவனமான 'பப்ளிக் ஐ' மற்றும் சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க் `IBFAN’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தை உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக, தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைய 15 முதல் 20 நாள்கள் ஆகும்” என தெரிவித்துள்ளார்.